tamilnadu

img

தக்காளி விலை கடும் வீழ்ச்சி

விவசாயிகள்கவலை

அவிநாசி, மார்ச் 11- அவிநாசி வாரச் சந்தைகளில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் கவலைய டைந்துள்ளனர். அவிநாசி சுற்றுவட்டார பகுதியிலிருந்து விவசா யிகள் தங்களது விளைபொருட்களை   வியாபாரிகளி டம் மொத்தமாக விற்பனை செய்வது வழக்கம். அது போல்  வாரச்சந்தைக்கு  விவசாயிகள் தக்காளி பழங் களை கொண்டு வந்தனர். தற்போது தக்காளி விளைச் சல் அதிகரித்து, சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் விலை கிடைக்காமல் கிலோ ரூ.4க்கு விற்பனையானது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வாரத் தில் இரு நாட்கள் தக்காளியை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்வோம். தக்காளி நாற்று ஒன்று ரூ.1.80க்கு வாங்குகிறோம். ஒரு ஏக்கருக்கு 7 ஆயி ரம் தக்காளி நாற்றுகள் நடுகிறோம். பிறகு உழவு செய்து, தொழு உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சி செடி களை பராமரிக்க ஏக்கருக்கு சுமார் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. தக்காளி பறிக்கப்பட்டு தினசரி மார்கெட் மற்றும் வாரச்சந்தைகளுக்கு கொண்டு சென்று மொத்தமாக விற்பனை செய்து வருகிறோம். மேலும், தக்காளியினை பறிக்க ஆள் கூலி, வண்டி வாடகை எல்லாம் கொடுத்து எடுத்து சென்றால் தின சரி மார்கெட், வாரச்சந்தைகளில் சுங்கம் கொடுத்து விற்பனை செய்யும்போது சரியான விலை கிடைப்ப தில்லை. தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள் ளதால் கடந்த ஒரு மாதகாலமாக விலை மிகவும் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி சென்ற மாதம் ரூ.20க்கும் மேல் விற்ற நிலையில், தற்போது வாரச்சந்தையில் கிலோ ரூ.4க்கு விற்பனையானது எங்களுக்கு வேதனையளிக்கிறது. அதனால் வியாபாரிகள் கேட்கும் விலைக்கே எங் களது விளைபொருட்களை விற்று வருவதால் பெரும் நஷ்டம் தான் ஏற்படுகிறது என வேதனையுடன் தெரி வித்தனர்.