tamilnadu

img

தமிழகத்தில் தலித், பழங்குடி மாணவர்கள் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திண்டுக்கல், நவ.23- மத்திய- மாநில அரசுகளின் மோச மான கல்விக் கொள்கையால்  தமிழ கத்தில் 3,400 அரசுப் பள்ளிகளை இழுத்து மூட அரசு தீவிரம் காட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்கு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். திண்டுக்கல்லில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாவட்ட சிறப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-  மத்திய பாஜக அரசு தேசிய கல்விக்கொள்கை நகல் அறிக்கையில் இந்தியாவில் அனைத்து குழந்தை களுக்கும் தரமான கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டுமென்று சொல்கிறது. தரமான கட்டாய இலவசக் கல்வி தரவேண்டும் என்று சொல்லும் அதே அறிக்கை, நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 20-க்கும் குறைவாக மாணவர்கள் இருந்தால் அவற்றை மூட வேண்டுமென்றும் கூறுகிறது.  இரண்டு. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பாஜக அரசு திட்டக்குழுவை கலைத்துவிட்டு “நிதி ஆயோக்”  அமை ப்பை உருவாக்கியது. மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட வேண்டும் என “நிதி ஆயோக்” எடுத்த முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் அதிமுக அரசு கிட்டத்தட்ட 3,400 அரசுப் பள்ளிகளை மூடுவதென முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. சில பள்ளிகளை மூடிவிட்டார்கள். தமிழகத்தில் பழங்குடியின மக்களுக்கு என பிரத்யேகமாக அரசுப்  பள்ளிகள் உள்ளன. ஆனால்  பழங்குடி யின மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. 2008-09ஆம் ஆண்டு கண்கெடுப்புப்படி பழங்குடி யினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 42 ஆயிரமாக இருந்தது தற்போது 17  ஆயிரமாகக் குறைந்துள்ளது. 2 லட்சத்து 8 ஆயிரம் மாண வர்களுடன் செயல் பட்ட ஆதி திராவிடர் பள்ளிகளில் தற்போது ஒரு லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளனர்.  திண்டுக்கல், தேனி, மதுரை  மாவட்டங்களில் தான் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் செயல்படு கின்றன. ஆதி திராவிடர் அல்லாத பள்ளி களாக கள்ளர் சமூக மக்களுக்கென இத்தகைய சிறப்புப் பள்ளிகள் அமைக்கப் பட்டன. 2008-ஆம் ஆண்டு இந்த பள்ளிகளில் 42 ஆயிரம் மாணவர்கள் பயின்றார்கள். கடந்தாண்டு அது 27 ஆயிரமாகக் குறைந்துள்ளது.  ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளி களில் மாணவர்கள் எண்ணிக்கை குறை வதும், தனியார் பள்ளிகளில் எண்ணிக்கை அதிகரிப்பதும் நடைபெறு கிறது. இதற்கு மத்திய- மாநில அரசு களின் கல்விக்கொள்கைகளே காரணம். அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் இலவசக் கல்வி சாத்தியமில்லை. ஏழை-எளிய குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். அரசுப்பள்ளி களை பாதுகாத்து. மேம்படுத்தி  இலவசக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.