கோவை, ஆக.14– கோவை மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிக்க புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க காவல்துறை யினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்ற னர். அவர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர். இந்நிலையில் அபராதம் விதிக்க புதிய கருவி தற்போது கோவை புறநகர் பகுதிகளில் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் கூறியதாவது, இந்த கருவி மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தலாம், அல்லது சலானை கொண்டு வங்கியிலும் பணம் கட்டலாம். தமிழகம் முழுவதும் 750 கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கை யிலான கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவையை பொறுத்தவரை கோவை புறநகர் பகுதிகளில் 16 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப் பாளையம், துடியலூர் ஆகிய 4 இடங்களில் போக்கு வரத்துக்கு என தனி பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் குறிப்பிட்ட அளவிலான காவல்துறையினர் உள்ளனர். மற்ற 12 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினரும் போக்குவரத்து தொடர்பான கண்காணிப் பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு முதற்கட்டமாக 16 கருவிகள் கொடுக் கப்பட்டுள்ளன. மேலும் இந்த கருவி மூலம் வாகன எண்ணை பதிவு செய்த உடனேயே அவர் எத்தனை முறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு உள்ளார். அபராதம் செலுத்தி உள்ளார் மற்றும் அபராதம் கட்ட தவறியுள்ளார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக தெரியவரும். மேலும், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், லைசன்ஸ் வாங்குவது போன்ற தேவைகளுக்காக ஆர்டிஓ அலுவ லகம் செல்லும்போது அவர்கள் வாகன எண்ணை வைத்து அவர்களுடைய போக்குவரத்து விதி மீறல் தொடர்பான தகவல்களை முழுமையாக அறிய முடியும். இதற்கு முன்பு சலானை பூர்த்தி செய்து அதன் மூலம் வாகன ஓட்டிக ளிடம் அபராதம் வசூலித்து வந்தனர்.தற்போது இந்த கருவியின் வருகை மூலம் விரைவில் அவர்களிடம் அபராதம் வசூலிப்பதுடன், அதிக எண்ணிக்கையிலான வாகன ஓட்டிகளை சோதனை செய்ய முடியும். இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.