வரலாற்றுச் சுவடாக மாறிய
திருப்பூரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், தமிழக சட்டப்பேர வையில் என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வும் வலியுறுத்தி 33 நாட்கள் நடத்தப்பட்ட தொடர் தர்ணா போராட்டம் புதன்கிழமை இரவு நிறைவு பெற்றது. இது ஒரு வர லாற்றுச் சுவடாக மாறிவிட்டது என்று சொன்னால் மிகையல்ல! கொரோனா வைரஸ் கிருமி யின் வேகமான பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதி யாக வரலாற்று சிறப்பு மிக்க போராட்டங்களையும் அதன் தலைவர்கள் மக்கள் நலன் என்ற நோக்கத்தில் தற்காலிகமாக ஒத்திவைக்க முன்வந்தனர். இதன் தொடர்ச்சியாக திருப் பூர் நொய்யல் வளம் பாலம் அருகே அறிவொளி சாலையில் இளைஞர்கள் கூட்டமைப்பு, குடியுரிமைப் பாதுகாப்புக் கூட் டமைப்பு சார்பில் நடத்தப் பட்டு வந்த தொடர் தர்ணா போராட்டமும் தற்போது தற் காலிகமாக முடிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஜமாத் கூட்டமைப்பின் கோரிக்கை தன்னிச்சையான அறிவிப்பு என்ற காரணத்தால் திருப்பூர் ஷாஹின்பாஃக் போராட்டக்குழு அதை நிராக ரித்திருந்தது. அதேநேரம் திருப்பூரில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டால் பரிசீலிக்கப் படும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த இரு நாட்களில் அரசின் அறிவிப்பு களும், ஊடகச் செய்திகளும் நிலைமை மோசமாவதாகச் சொல்லியபடி இருந்தன. முதல் கட்டமாகத் திருப்பூரில் 100 பேருக்கு மேல் தொழிலாளர்கள் பணிபுரியும் பனியன் கம்பெனி கள் மூடும்படியான உத்தரவு வெளியிடப்படும் என்பதாகத் தகவல் பரவி வந்தது. இவை யெல்லாம் உண்மைச் செய்தி களா அல்லது திட்டமிட்ட மிகைப் படுத்தலா என்று உறுதிப்படுத் தக்கூடிய அவகாசம் கூட இல்லை.
ஆனால், ‘திருப்பூர் ஷாஹின் பாக் போராட்டக்காரர்கள் தங்களுடைய பிடிவாதத்தால் ஊர் முழுக்க கொரோனா நோயைப் பரப்பப் போகிறார்கள்’ என்று மோசடியான கருத்துருவாக்கம் செய்து, சமூக ஊடகங்களிலும், பொதுவெளியிலும் அரசின் உள வுத் துறையும், சில விஷமிகளும் பரப்பினர். அவர்கள் நோக்கம் ஒன்றுதான், கொரோனாவை காரணமாக வைத்து இந்த மகத்தான போராட்டத்தை கொச் சைப்படுத்துவதே! திட்டமிட்டு பொது மக்களிடம் ஷாஹின்பாக் போராட்டக்காரர்களின் மீது வெறுப்பை விதைக்கும் திட்டத் தோடு பிரச்சாரம் செய்துகொண்டு இருப்பதும் தெரிந்தது. இதையெல்லாம் கூர்ந்து கவனித்துக்கொண்டே திருப்பூர் ஷாஹின்பாக்கின் வழக்கமான நிகழ்வுகள் நடந்துகொண்டு இருந்தன. புதன்கிழமை இரவு 8 மணிக்கு திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, தி.மு.க, காங்கி ரஸ் கட்சி, தி.வி.க, த.பெ.தி.க, சிறுபான்மை நலக்குழு, திருப் பூர் அனைத்து பெரியாரிய கூட்டமைப்பு, முற்போக்குக் கூட்டமைப்பு, திருவள்ளுவர் இளைஞர் மன்றம், கோவில் கமிட்டி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டத் திடலுக்கு வந்து நாட்டில் நிலவு கிற மருத்துவ அசாதாரண நிலை யைக் கருத்தில் கொண்டு பரி சீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
இப்போராட்டத்தைத் தற் காலிகமாக ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்து மக்கள் முன்பாக உரையாற்றினார்கள். முன்னதாக இதே கோரிக்கையை மாவட்ட ஆட்சியரும், மாவட் டக் காவல்துறைக் கண்காணிப் பாளரும் கூட்டமைப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு ஈடாக போராட்டக்குழு வினர் வைத்த சில கோரிக்கை களை அவர்கள் ஏற்றுக்கொண்ட னர். நடந்த விபரங்களை கூட்ட மைப்பு நிர்வாகிகள் மக்களிடம் எடுத்துச்சொல்லி மக்களின் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பா லான மக்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு இந்த தற்காலிக ஒத்திவைப்புக்கு ஒத்துழைக்கத் தயாரானார்கள். ஆனாலும் சில ருக்கு இதில் உடன்பாடு இல்லை தான். பெரும்பான்மைக் கருத்தின் அடிப்படையில் இந்த தற்காலிக ஒத்திவைப்பை கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
கடந்த 33 நாட்களாக நடந்த இந்தப் போராட்டத்திற்கு கோடிக் கணக்கில் செலவாகியிருக்கி றது. மக்களும், நன்கொடை யாளர்களும் அள்ளிக்கொடுத்த பணம்தான் அது. அந்த நன் கொடையாளர்களுக்கும், இரவு பகல் பாராமல் உழைத்த இளை ஞர்களுக்கும், சமையல் செய்து கொடுத்த குழுவினருக்கும், ஒத்து ழைத்த மக்களுக்கும் என அனை வருக்கும் நன்றி சொல்லப்பட்டது. கடைசியாக சாமியானா, மைக் செட் போன்றவற்றின் கணக்கு முடிக்க 1.5 லட்சம் ரூபாய் நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் நிலையைச் சொல்லி மக்களிடம் நிதி உதவி கோரப்பட்டது. அப் போது மேடையில் அமர்ந்திருந்த திமுக மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் கடனில் 50 ஆயி ரம் ரூபாயைத் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். போராட்டம் கொண்டாட்ட மயமானது என்ற சொலவடைக்கு ஏற்ப இந்த 33 நாட்களும் திரு விழாவைப்போல நடந்த இந்தப் போராட்டத்தில் உற் சாகமாகக் கலந்துகொண்ட மக்களால் இன்றோடு இது முடி யப்போகிறது என்பதை சுலப மாக ஏற்றுக்கொள்ளவே முடிய வில்லை. உள்ளூரக் கலங்கித்தான் போனார்கள். நேரமாக, நேரமாக அவர்கள் எல்லோருக்குள்ளும் ஒருவித இனம் புரியாத சோகம் இழையோடிப் படிந்துகொன்டி ருந்தது.
எல்லாவற்றுக்குப் பின்பும் இன்னும் மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள். நம்பிக்கையோடு இருக்கிறார்கள். எப்போது அழைத்தாலும் எவ்விதப் போராட்டத்துக்கும் ஓடிவரத் தயாராக இருக்கிறார்கள். மக் கள் மீதான இந்த நம்பிக்கை யோடுதான் இந்தப் போராட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. மீண் டும் புதுப் பொலிவுடன் புதிய வடி வத்தில் இன்னும் வீரியமாக இப்போராட்டம் தொடரும். பொதுவாகப் பதினொரு மணி நெருங்கும்போதே காவல் துறையினர் நிகழ்வை முடிக்கச் சொல்லி நெருக்கடி கொடுப்பார் கள். இப்போது மணி நள்ளிரவு ஒன்றை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இதோ ஆயிரக்கணக் கான பெண்களும், இளைஞர்க ளும் மக்களும் கலைந்து செல்லா மல் உற்சாகமாகக் முழக்கங்கள் எழுப்பிக்கொண்டு இருக்கி றார்கள். இப்படியாக இந்த போராட் டம் தற்காலிகமாக நிறுத்தப்பட் டது. திருப்பூர் ஷாஹின்பாஃக் நிச்சயம் ஒரு வரலாற்றுச் சுவடாக நிலைபெறும்.
-எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா