tamilnadu

img

புதிய தார்சாலையில் வாகனங்கள் திடீரென புதைவு பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை : கோவை வடவள்ளி பிரதான சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய தார்சாலை போடப்பட்டது. இந்நிலையில் தரமில்லாமல் போடப்பட்ட இச்சாலையில் செல்லும் வாகனங்கள் திடீரென புதைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பெரும் அசம்பாவிதம் நடைபெறும் முன் சாலையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.