tamilnadu

img

பட்டா கொடுத்தும் பயனில்லை- ஆட்சியரிடம் முறையீடு

ஈரோடு, ஜூன் 17- பட்டா இருந்தும் வீடு கட்ட முடிய வில்லை என ஈரோடு மாவட்ட ஆட்சியரி டம் குறை தீர் கூட்டத்தில் முறையிடப்பட் டுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி  சின்னியம் பாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் 10 திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு 2018 மே 11 ஆம் தேதி அரசு சிலுவம்பாளையத்தில் இடம் வீட்டுமனை ஒதுக்கப்பட்டு பட்டா கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நிலமானது வாழ முடியாத நிலையில் பெரும் குழியாக இருந்தது. இதனால் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது அந்த இடத்தை காலி செய்ய நிர்பந்தம் செய்யப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியா கத் தலையிட்டு அதிகாரிகளை நியமித்து நிலத்தை சீரமைத்து குடியேற வழிவகை செய்ய வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டும் வரை தற்போது வசிக்கும் பகுதியில் வசிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சசி தலைமையில் திங்களன்று மனு அளித்துள்ளனர்.