கோவை, ஜூன் 30- கோவையில் கேரட் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒசகட்டி மற்றும் ஊட்டி பகுதிகளில் கேரட் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. கோடை மழை குறைந்த காரணத்தினால் கேரட் சாகுபடி செய்வதில் சிரமம் ஏற்பட்டது. வறட்சியி லும் விவசாயம் மேற்கொண்டவர்களுக்கு குறைந்த அள விலேயே மகசூல் கிடைத்தது. இந்நிலையில், கோவை உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்துதான் கேரட்டுகள் விற்பனைக்காக வருகின்றன. கோவையில் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தை பொறுத் தவரையில் ஒரு கிலோ கேரட் ரூ.35 முதல் ரூ.45 வரை விற் பனையானது. வரத்து தொடர்ந்து குறைந்ததால் மே முதல் வாரத்தில் ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனையானது. தென்மேற்கு பருவமழையால் கேரட் விவசாயம் மேம்பட்டு, விலையும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேரட் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் எதிர் பார்த்த அளவு மழை பொழிவு இல்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் கேரட் விலை அதிகரித்துள்ளது. கோவையில் சில்லரை விற்பனையகங்களில் தற்போது கிலோ ரூ.60 முதல் 70 வரை விற்பனையாகிறது. இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மழை இல்லாத காரணத்தால் கேரட் வரத்து குறைந்து விலையேற்றம் கண்டு வருகிறது. தற்போதைய சூழலில் தென்மேற்கு பருவ கைகொடுத்தால், அடுத்த ஒருசில மாதங் களில் கேரட் விலை குறைய வாய்ப்புள்ளது.’’ என்றனர்.