tamilnadu

சிறுவாணி நீர்வழங்கலில் தடை இல்லை மாநகராட்சி ஆணையாளர் உறுதி

கோவை, மே 31 - கோவைக்கு சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகம் குறையும் என்ற செய்திக்கு கோவை மாவட்ட மாநகராட்சி ஆணையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரும் மற்றும் தனி அலுவலருமான ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறிய தாவது, கோவை மாநகராட்சி, சிறுவாணி அணைப்பகுதி யில் கேரளா அரசால் தடை ஏற்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு சிறுவாணி குடிநீர் கிடைப்பதில், சிரமம் ஏற்படும் என கடந்த சில நாட்களாக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு கோடைக் காலங்களிலும் கோவை மாநக ராட்சிக்கு கிடைக்கப்பெற்று வரும் குடிநீர் அளவே தற்போதும் பெறப்பட்டு வருகிறது. இந்த அளவானது வருகிற ஜீன் மாதம் இறுதி வரையிலும் எவ்விதத் தடங்க லும் இன்றி கிடைக்கப்பெறும். மேலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தென் மேற்குப் பருவமழை தொடங்கவுள்ளது. இதனால் மாந கராட்சி முழுவதும் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் அளவீட்டில் எவ்விதத்திலும் பாதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;