tamilnadu

img

ஏடிஎம் சேவை முடங்கியது; பொதுமக்கள் கடும் அவதி

அவிநாசி, ஜூன் 26- அவிநாசி அடுத்த சேவூரில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஆக்ஸிஸ்  வங்கி, இந்தியன் வங்கி சார்புடைய தமிழ்நாடு கிராம வங்கி என மூன்று வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளின் ஏடிஎம் சேவை திங்கட் கிழமை முதல் முடங்கியதால், பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகி உள்ளனர்.   அவிநாசி ஒன்றியம் சேவூரில் கடந்த 40 ஆண்டுகளுக் கும் மேலாக பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வரு கிறது. சேவூர் சுற்றுவட்டார பகுதிகளான தண்டுக்காரன் பாளையம், முறியாண்டாம்பாளையம், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார், குட்டகம், கானூர் உள்பட பல ஊராட்சி பகுதியை சேர்ந்த  கிராம மக்கள் பலர் இந்த வங்கியில் வாடிக்கையாளர் களாக உள்ளனர். இந்த வங்கியானது அவிநாசியில்  உள்ள வங்கிகளுக்கு இணையாக அதிக வாடிக்கை யாளர்களை கொண்டதாகும்.  சேவூர் கோபிசாலை வடக்கு வீதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இதேபோல் சேவூர் கைகாட்டி ரவுண்டானாவில் ஐடிபிஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி களின் மூன்று ஏடிஎம் மையங்கள் உள்ளன. இந்நிலையில் திங்களன்று  முதல்  கைகாட்டி ரவுண்டானா பகுதியில் உள்ள   ஏடிஎம்கள்  செயல்படாமல் முடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது தேவைக்காக பணம் எடுக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,சேவூர் கை காட்டி பகுதியில் உள்ள ஐடிபி.ஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கி களின் ஏடிஎம் மையங்கள்  திங்கட்கிழமை இரவு முதல்  செயல்படாமல் முடங்கி உள்ளது. இதனால் அன்றாட செலவுக்கு கூட பணம் எடுக்க வழியில்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். இதேபோல் வடக்கு வீதியில் உள்ள  பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்யில் ரூ.2 ஆயிரம் நோட்டு மட்டுமே எடுக்க முடிகிறது. மற்ற 100,500 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை. எனவே குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வருவதை வங்கி நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும். மேலும் செயல்படாமல் உள்ள ஏடிஎம்  மையங்கள் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.