tamilnadu

img

விவசாயிகள் கோரிக்கை விவாத மேடையை புறக்கணித்த அதிமுக- பாஜக

ஈரோடு, ஏப்.8-ஈரோட்டில் நடைபெற்ற விவசாயிகள் கோரிக்கை விவாத மேடைக்கு அனைத்து கட்சியின் வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியின் வேட்பாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நில உரிமை பறிப்பாலும், கடன் சுமையாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் ஈரோட்டில் கோரிக்கை விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விளை நிலத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பு, கெயில் குழாய்பதிப்பு, பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய்‌ குழாய் மற்றும் எரிவாயு குழாய், கரூர்- கோவை ஆறு வழிச்சாலை, எட்டு வழி சாலை, சேலம் விமான நிலைய விரிவாக்கம், ஹைட்ரோ கார்பன், நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கம் மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்நிலையில் இந்த விவாத மேடைக்காக அனைத்துகட்சி வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலபொதுச்செயலாளர் பெ.சண்முகம் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஆனால், அதிமுக-பாஜக வேட்பாளர்கள் யாரும் வரவில்லை.இதன்பின் கூட்டத்திற்கு வந்திருந்த வேட்பாளர்கள் பேசுகையில், நில உரிமை பறிப்பை கடுமையாக எதிர்ப்பதாகவும், நாடாளுமன்ற பிரதிநிதியாகவும் ஆளும் கட்சியாகவும் வரும்போது பாதிக்கப்பட்டவர்கள் வைத்துள்ள மாற்று தீர்வு கண்டிப்பாக செயல்படுத்தப்படும். அதேபோல் அனைத்து வகை கடன்களையும் தள்ளுபடிசெய்யப்படும் என உத்தரவாதம் அளித்தனர். வெற்றிபெறஇயலவில்லை என்றாலும் விவசாயிகளோடு இணைந்துபோராட்டத்தில் துணை நிற்பதாகவும் வாக்குறுதியளித்தனர். அதேநேரம், அதிமுக- பாஜக கூட்டணியின் வேட்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

;