அரசு பேருந்து-கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
தாராபுரம், ஜூலை 25- தாராபுரம் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் காரில் பயணித்த 3 பேர் பலியாகினர். மேலும் கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பினார். இச் சம்பவம் தாராபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பள்ளபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் பாண்டி (36). இவர் மதுரையில் இன்ஜினியரிங் கம்பெனி வைத்து எலெக்ட்ரிக்கல் காண்ட்ராக்ட்ராக பணி செய்து வருகிறார். சுரேஷ் பாண்டியின் அண்ணன் தவ மணியின் மகன் ராஜபாண்டி (26). பொறியியல் பட்டதாரியான இவர் அதே கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். மேலும் திண்டுக்கல் கோட்டூரை சேர்ந்த ஜோசப் சகாயராஜ் மகன் ஜோ கிரில் வளன் (22). திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சேர்ந்த சிவசங்கு என்பவரது மகன் சிவ னேசன் (24) ஆகிய இரண்டு பேரும் அதே கம்பெனியில் டெக்னிசியனாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மேட்டுப்பாளை யத்தில் அஸ்வதிக் என்ற கம்பெனிக்கு எலெக்ட்ரிக்கல் வேலை செய்வதற்காக நிலக்கோட்டையில் இருந்து ராஜ பாண்டிக்கு சொந்தமான காரில் நான்கு பேரும் புறப்பட்டனர். காரை ராஜ பாண்டி ஓட்டி உள்ளார். கார் தாராபுரம் திருப்பூர் ரோடு காதப்புள்ளபட்டி அருகே வந்தபோது கோவையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. ஜோ கிரில் வளன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படு காயமடைந்த சிவனேசன், சுரேஷ் பாண்டி மற்றும் சிறிய காயமடைந்த ராஜபாண்டி ஆகியோரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக் காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவ மனையில் சிகிச்சையளிக்கும் முன்பே சிவனேசன், சுரேஷ்பாண்டி இறந்து விட்டனர். ராஜபாண்டிக்கு சிகிச்சையளிக் கப்பட்டு வெளிநோயாளியாக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ராஜபாண்டி அளித்த புகாரின்பேரில், தாராபுரம் ஆய்வாளர் கோபிநாத் வழக்குப் பதிவு செய்து மதுரையை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் மணிமாறனை (43) கைது செய்தார். சம்பவ இடத்தை திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி, தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராம் ஆகியோர் பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். பிரேத பரிசோதனைக்கு பிறகு 3 உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் அலங்கியத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகையோ, போக்கு வரத்தை கட்டுப்படுத்துவதற்கான பணி களில் ஊழியர்கள் ஈடுபடுவதில்லை. இதனால் குறுகலான சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் வேகமாக வரும் வாகனங்களை தடுப்புகள் வைத்து கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால்தான் தொடர் விபத்துகளை தடுக்க இயலும்.
ஒன்றிய அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா
அவிநாசி, ஜூலை 25- அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில், அதிகாரிகள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை. இதனால் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கூறியுள்ளார். அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சி ஒன்றிய அலுவலகமாக செயல்பட்டு வரு கிறது. இங்கு பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் குறித்த நேரத் திற்கு வராமல், 11 மணிக்கு மேல் வருவ தாகவும், இதனால் பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் ஹரிஹரன் தெரிவிக்கையில், காலை 10 மணி முதல் மாலை 5.40 மணி வரை அரசுத்துறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள் தாமதமாக வருவதன் காரணமாக, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா பொருத்து வதன் மூலம் அரசு அதிகாரிகள் குறித்த நேரத்திற்கு வருவார்கள் என தெரிவித்தார்.