tamilnadu

img

விஷமத்தனமான விளம்பரம் செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்திடுக

கோவை, ஜூன் 24- திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாது காப்பு வழங்கப்படும் என விஷமத் தனமாக விளம்பரம் செய்துள்ள ஒயோ நிறுவனத்தின் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் கோவை மாவட்ட ஆட்சியரி டம் திங்களன்று புகார் அளித்தனர். இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா கூறு கையில், கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை கள், கொலைகள் நடைபெற்று வரு கிறது. இதனைத் தடுக்கும் முயற்சி யில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி வரு கின்றது. ஆனால் வளர்ந்து வரும் நகரத்தை மையப்படுத்தி சில நிறு வனங்கள் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான விளம்பரங் களை செய்து வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக கோவை நவஇந்தியா பகுதியில் ஒயோ என்ற சர்வீஸ் அபார்ட்மெண்ட் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்க ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப் படும் என இணையதளத்தில் விளம் பரம் செய்துள்ளனர். இது சட்ட விரோத செயல்களுக்குத் துணை போகும் வகையில் இருக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணமாக அமையும் வகையில் இருக்கிறது. இதுபோன்ற விஷமத் தனமான விளம்பரம் செய்வதைத் தடுப்பதோடு. அந்நிறுவனத்தின் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்கிற மனுவை அளித்துள்ளோம். இதுதொடருமானால் அடுத்த கட்ட போராட்டத்தில் மாதர் சங்கம் ஈடுபடும் என்பதையும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். இதேபோல துடியலூரில் பாலியல்பலத்காரம் செய்யப் பட்டு இறந்த சிறுமியின் குடும் பத்திற்கு அரசு அறிவித்த நிவா ரணம் இதுவரையில் கொடுக்கப் படவில்லை. ஏழ்மை நிலையில்  உள்ள இக்குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்கிற மற்றொரு மனுவையும் ஆட்சியரிடம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இம்மனுவினை அளிக்கையில் மாதர் சங்கத்தின்  நிர்வாகிகள் ராதிகா, ஜோதிமணி,  ராஜலட்சுமி, சாந்தா, சுதா  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.