பொள்ளாச்சி, செப். 28- பொள்ளாச்சியை அடுத்த நாகர் ஊத்து வன கிராமத்தில் 23 பழங்குடியின குடும்பங்களுக்கு, கோவை ரோட்டரி டவுன் கிளப் சார்பில் இலவசமாக சமையல் எரிவாயு அடுப்பு கள் வழங்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட் பட்ட நாகர் ஊத்து செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கின்ற 23 பழங்குடியின குடும்பங்களுக்கு கோவை, ரோட்டரி டவுன் கிளப் அமைப்பின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை யில் இலவசமாக சமையல் எரிவாயு அடுப்புகள் சனியன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோவை ரோட்டரி டவுன் கிளப் அமைப்பின் பொறுப்பாளர்கள், செந்தில் குமார்,பாக்கியநாதன், கார்த்திக் மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.