திருப்பூர், டிச. 21 - குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில் கூறு போடும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என வலியு றுத்தி நடைபெற்ற போராட்டத்தில் திருப்பூர் வட்டார கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்த சட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது தில்லியில் மத்திய அரசு போலீஸ் படையை ஏவி வன்முறையை நிகழ்த்தியதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப் பட்டன. மாணவர் சங்க மாநில துணைத் தலை வர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.