மாணவன் இறப்பில் சந்தேகமென பெற்றோர்கள் குற்றச்சாட்டு
கோவை, டிச.20 - கோவை மாவட்டம் காரமடையி லுள்ள தனியார் பள்ளியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சூலூர் பாப்பம்பட்டி கிரா மத்தை சேர்ந்த குமார். கோழி இறைச்சி கடை மற்றும் ஹாலோ பிளாக் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஹரீஷ் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை கண்ணார்பாளையத்தில் செயல்பட்டு வரும் வித்யா விகாஸ் என்ற தனியார் பள்ளி விடுதியில் தங்கி 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் படித்து வருகிறார். இவர் வியாழன்று மதியம் வகுப்பறையில் ஆசிரியரிடம் வயிறு வலிப்பதாக கூறிவிட்டு தான் தங்கியுள்ள விடுதிக்கு சென்றுள்ளார். பின்னர் சக மாணவர்கள் வகுப்பு கள் முடிந்து மாலை விடுதிக்கு திரும்பி உள்ளனர். அப்போது விடுதியில் உள்ள மின்விசிறியில் மாணவர் ஹரிஷ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பள்ளி நிர்வா கிகளிடம் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம் பவ இடத்திற்கு வந்த காரமடை காவல் துறையினர் உயிரிழந்த ஹரிஷ் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் காரமடை காவல் நிலையத்திற்கு வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனின் சாவில் சந்தேகம் இருப் பதாகவும் எங்களுக்கு உரிய தகவல் அளிக்காமல் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவர் தங்கி யிருந்த அறைக்கு அவரது உறவி னர்களை நேரில் அழைத்து சென்ற பள்ளி நிர்வாகத்தினர் சம்பவம் குறித்து விளக்கினர். மாணவனின் இறப்புக்கு உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.