tamilnadu

தெரு விளக்குகள் புகாருக்கு கட்டணமில்லா செல்லிடப்பேசி எண்

 திருப்பூர், மே 22-திருப்பூர் மாநகரப் பகுதிகளில் தெருவிளக்குகள் தொடர்பான புகார்களுக்கு கட்டணமில்லா செல்லிடப்பேசியில் புகார் அளிக்குமாறு மாநகராட்சி அறிவித்துள்ளது.  இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாநகராட்சியானது நான்கு மண்டல அலுவலகங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில், சொத்து வரி, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்புப் பெறுதல், குடிநீர்க் கட்டணம் செலுத்துதல், தொழில் வரி, தொழிற்சாலை உரிமம் பெறுதல், சாக்கடை வசதி, மின்சார வசதி, கொசு மருந்து தெளித்தல், சாக்கடை தூர்வாருதல் போன்ற புகார்களுக்கு பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள மண்டல அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.மண்டல எண்-1 15. வேலம்பாளையம், 0421-2256815, 2258985, 2256983, மண்டல எண்-2 தொட்டிபாளையம் 0421-2484887, 2488257, மண்டல எண் 3 நல்லூர் 0421- 2374466, 2374465, மண்டல எண் 4, ஆண்டிபாளையம் 0421-2260067, 2261169 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இதேபோல்தெருவிளக்கு தொடர்பானபுகார்களைத் தெரிவிக்க 85085-00000 என்ற கட்டணமில்லா செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.