tamilnadu

img

டிச.26-ல் வளைய சூரிய கிரகணம் : பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

அரியலூர், டிச.20- வரும் டிச.26 அன்று வளைய சூரிய கிரகணம் நிகழவுள்ளதையொட்டி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. அன்னை தெரசா பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு யூனிவர்சல் அல்மைட்டி டிவைன் பவர் பவுண்டேஷன்  மற்றும் அன்னை தெரசா கல்வி நிறு வனங்களின் நிறுவனர் முத்துக் குமரன் தலைமை தாங்கி பேசிய தாவது:  கிரகணம் என்றால் என்ன? சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான் பொருளின் நிழல் மற்றொரு வான் பொருளில் விழுவதை தான் கிரகணம்  என்கிறோம். இது ஒரு நிழல் விளையாட்டு தான். வெறும் நிழல் தான். சூரியனை மறைக்கும் நிலவின் நிழல் பூமியில் விழுவது சூரியகிரகணம். பூமியின் நிழல் நிலவில் விழுவது சந்திர கிர கணம். வானியல் நிபுணர்கள் வரு கின்ற டிசம்பர் 26-ஆம் தேதி அன்று காலை 8:06  மணிக்கு தொடங்கும் சூரிய கிரகணம் அன்றே காலை 11:14  மணிக்கு முடிகிறது. மிகச் சரியாக காலை 9:31 முதல் காலை 9:34 வரை வளைய சூரிய கிரகணம் மூன்று நிமிடங்கள் தெரியும் என்று கணித்துள் ளனர். நிலவு சூரியனை விட 400 மடங்கு அளவில் சிறியது. அதே சமயம் நிலவு 400 மடங்கு பூமிக்கு அருகாமை யில் இருக்கிறது. இதனால் நிலவின் தோற்றம் பூமியில் இருந்து பார்ப்ப தற்கு சூரியனுக்கு ஒத்த அளவாக இருக்கிறது. இது இயற்கையாகவே அமைந்திருக்கிறது. இதன் காரண மாகவே நிலவு சூரியனை முழுமை யாக மறைப்பது போன்று காட்சி தோன்றும். சூரிய கிரகணம் இருக்கும் போது வெறும் கண்ணால் யாரும் பார்க்கக் கூடாது. என்று பேசினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக கண்கள் பாதிப்படையாத கிர கணம் பார்க்கும் கண்ணாடி வழங்கப் பட்டது. கண்ணாடியைக் கொண்டு குறிப்பாக, சில நொடிகள் மட்டுமே பார்க்க மாணவர்களுக்கு அறிவுறுத் தப்பட்டது.  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பி னர் ஞானசேகரன, மாவட்ட தலைவர் பழனியப்பன், செயலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்தி பேசினர். நிறைவாக பள்ளி துணை முதல்வர் தாரணி நன்றி கூறினார்.

;