tamilnadu

img

சூரிய கிரகணம்: கடலூர் மாவட்டத்தில் 20 பேர் ஆயிரம் கண்டுகளிப்பு

நெய்வேலி,டிச.26- வளைய சூரிய கிரகணத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம்  கடலூர் மாவட்டம் முழுவதும்  20 ஆயி ரம் பேர் கண்டு களித்தனர். சூரியனை நிலவு மறைத்து, அதன்  நிழல், பூமியில் விழும்போது  சூரிய  கிரகணம் தோன்றுகிறது. இதனை காலை 8.05 மணி முதல் 11.20 வரை  கடலூர், நெய்வேலி, மந்தாரக் குப்பம், பண்ருட்டி, விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அறிவியல் இயக்கம்  தயாரித்து வழங்கிய பிரத்யேக கருவி  மற்றும் சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடி  மூலம் மாணவர்கள்,பொது மக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர். அறிவியல் இயக்கத்தின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் மு.விஜய குமார், மாவட்டச் செயலாளர் ஆர். தாமோதரன் தலைமையில் பந்து மற்றும் கண்ணாடி துண்டை பயன் படுத்தி சூரிய ஒளியை வீட்டுக்குள் பிரதிபலிக்கச் செய்து கிரகணத்தை வீட்டுக்குள் இருந்தபடியே காணும் முறையும்  சாதாரண அட்டைகளில் துளை ஏற்படுத்தி உதவியுடன் தரை யில் விழும் பிம்பத்தில் சூரிய கிர கணத்தை காணும் எளிய முறையும்  பள்ளிகளில் விளக்கம் அளிக்கப் பட்டது. 

கடலூர் சில்வர் பீச் கடற்கரை,  பண்ருட்டியில் உள்ள ஜான் டூயூ  பள்ளி, நெய்வேலி, மந்தாரக்குப்ப தில் உள்ள மைதானம் உள்ளிட்ட இடங்களில் ஜெயவீர பாண்டியன், பரமேஸ்வரி, உதயெண் திறன், தாம ரைச்செல்வி, பேபி மாலா மற்றும் சசிகலா தலைமையில் நான்கு இடங்  களில் வான் நோக்கி மூலம் காண் பிக்கப்பட்டது.. பண்ருட்டியில் பொது  மக்களுக்கு பொங்கல் வழங்கி சாப்பிட வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலை வர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத்  தலைவர்கள் விக்டர் ஜெயசீலன், பாலகுருநாதன், தெரசா கேத்தரின்,  துணைச் செயலாளர் பாலு, மற்றும், சுகந்தி, செல்வின் ராஜ்,மோகன் உள் ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கலந்துரையாடல்

ஆம்பூர் தனியார் மெட்ரிகுலே ஷன் பெத்தேல் மேல்நிலைப் பள்ளி யில் சூரிய கிரகணத்தின் நிகழ்வைப்  பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களிடம் சூரிய கிர கண நிகழ்வை பற்றி கலந்துரை யாடினார்.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாநில பொதுச்  செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட துளிர் வினாடி வினா பொறுப்பாளர் ஆசிரியர் சரவணன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் சி. குண சேகரன் ந.கருணாநிதி, மாவட்ட துணைத்தலைவர் ராமன், மாவட்டப் பொருளாளர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

;