திருப்பூர், செப். 24 – திருப்பூரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தமிழக அரசின் நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங் மற்றும் நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். திருப்பூர் பாண்டியன் நகரில் நடைபெற்று வரும் குடிநீர் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியையும், புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளையும், டவுன்ஹால் மைதானத்தில் புதி தாக கட்டப்படவுள்ள ஒருங்கி ணைந்த மாநாட்டு அரங்கப் பணி களையும் செவ்வாய்க்கிழமை ஹர்மந்தர்சிங், கிருஷ்ணன் ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு செய்த னர். இந்த ஆய்வின்போது மாநக ராட்சி ஆணையர் க.சிவக்குமார், மாநகரப் பொறியாளர் ஜி.ரவி ஆகியோர் உடனிருந்து பணியின் விபரங்களை எடுத்துக் கூறினர். மாநகர் நல அலுவலர் பூபதி, செயற்பொறியாளர் எஸ்.திரு முருகன் மற்றும் மாநகராட்சி அலு வலர்கள் பங்கேற்றனர்.