கோவை, ஆக. 29- கோவை எட்டிமடை ரயில் நிலைய பெண் அதி காரியை மர்ம நபர் ஒரு வர் கத்தியால் குத்திய சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. கேரள மாநிம் வாளை யார் பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா (28). இவர் கோவை எட்டிமடை ரயில் நிலையத்தில் நிலைய அதி காரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வியாழனன்று அதிகாலை யில் அஞ்சனா எட்டிமடை ரயில் நிலையத்தில் உள்ள தனது அறையில் பணியில் இருந்துள்ளார். அப்போது அவரது அறைக்குள் மர்மநபர் ஒருவர் பட்டாம்பி செல்ல எப்போது ரயில் வரும் என கேட்டுக் கொண்டே நுழைந்துள்ளார். பின்னர் திடீ ரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஞ்சனாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரின் அலறல் சத்தம்கேட்ட ரயில்வே காவல்துறையினர் ஓடிவந்து மர்ம நபரை பிடிக்க முயன் றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி மறைந்தார். இதற்கிடையே மர்மநபர் தாக்கியதில் அஞ்சனாவின் முகம், கழுத்து, கை ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அஞ்சனாவை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனையில் ரயில்வே காவல்துறையினர் சேர்த்த னர். இந்த சம்பவம் குறித்து போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ரயில்வே பெண் அதிகாரியை மர்மநபர் ஒருவர் திடீரென கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.