tamilnadu

img

சேலம் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆய்வு

சேலம், பிப்.26- சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடியே 16 லட்சம் மதிப் பீட்டில் 11 ஸ்மார்ட் சாலை கள் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் புதனன்று ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங் களில் சீர்மிகு நகர திட்டத் தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரில் 11 பிரதான சாலைகள் ரூ.37 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சாலைகளாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுப்புராயன் வீதியில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் தார்ச்சாலை அமைக்கும் பணியை  மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாநக ராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற் கொண்டார். இந்த ஸ்மார்ட் சாலையின் சிறப்பு அம்சங்களாக பாதசாரிகளுக்கு நடைபாதை, மழைநீர் வடிகால் வசதி, மின்சார மற்றும் தொலைபேசி, சிசிடிவி கேபிள்கள் அமைத்திட குழாய் வசதிகள், மிதிவண்டி ஓடுதளம், நவீன மின் விளக்கு கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  மேலும் சீர்மிகு சாலைகள் அமைக்கும்  பணி விரைவில் முடிந்தவுடன் தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதனை  பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து  வைக்க உள்ளதாக ஆணையாளர்  சதீஷ் தெரிவித்துள்ளார்.