tamilnadu

சேலம் ஸ்கூட்டருக்கு, சென்னையில் அபராதம் விதிப்பு

உரிமையாளர் அதிர்ச்சி

சேலம், டிச.13- சென்னையில் ‘ஹெல்மெட்’ அணி யாமல் ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றதாக  கூறி சேலத்தை சேர்ந்த பெண்ணுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வந்ததால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  சேலம் மாவட்டம், பன மரத்துப்பட்டி பழைய தபால் நிலைய தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவருடைய மனைவி கார்த்திகா (36). இவர் உள்ளூரில் பயன் படுத்துவதற்காக ஒரு ஸ்கூட்டர் வைத்துள் ளார். இந்நிலையில் சென்னை மணலி  போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் அலுவலக முத்திரையுடன், கார்த்திகா பெயருக்கு ஒரு தபால் வந்தது.  அந்த தபாலை பிரித்து பார்த்த போது  அவர் அதிர்ச்சி அடைந்தார். தபாலில், கடந்த 3ஆம் தேதியன்று சென்னை மணலி  போக்குவரத்து போலீஸ் நிலைய  எல்லைக்குட்பட்ட 200 அடி சாலையில் கார்த்திகா, ‘ஹெல்மெட்’ அணியாமல்  அவரது ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற தாகவும், அதற்கு அபராத தொகை யாக ரூ.100-ஐ 24 மணி நேரத்தில் செலுத்து மாறும் கூறப்பட்டு இருந்தது. அதில் கார்த்திகாவின் ஸ்கூட்டர் பதிவு எண் குறிப் பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த அபராத  தொகையை தமிழ்நாடு போலீஸ் இணைய  தளத்திற்கு சென்று ஆன்-லைனில் கட்டு மாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து கார்த்திகா கூறியதாவது,  கடந்த 3-ந் தேதி நான் பனமரத்துப் பட்டியில் எனது வீட்டில் தான் இருந்தேன்.  குறிப்பிட்ட பதிவெண் கொண்ட அந்த ஸ்கூட்டரும் எனது வீட்டில் தான் நின்றது. மேலும் எனது ஸ்கூட்டரில் இதுவரை சென்னைக்கு சென்றது கூட  கிடையாது. இதனால் அதிர்ச்சி அடைந்துள் ளேன். எனது ஸ்கூட்டர் பதிவெண்ணுடன் சென்னையில் வேறு ஒரு ஸ்கூட்டர் இயக் கப்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுந் துள்ளது. எனது இந்த புகார் குறித்து சம்பந் தப்பட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். சென்னை மணலி போக்குவரத்து போலீசார் எதன் அடிப்படையில் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனர் என்பது குறித்து விசாரித்தால் மட்டுமே இந்த பிரச்ச னைக்கு உரிய தீர்வு கிடைக்கும். போக்கு வரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி ஹெல்மெட் அணி யாதவர்களுக்கு அபராதம் விதித்து வரும் நிலையில், சென்னைக்கு செல்லாத ஒரு  நபருக்கு, அவர் எடுத்து செல்லாத வண்டியின் பெயரில் அபராதம் விதி்த்து நோட்டீஸ் அனுப்பியது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

;