tamilnadu

கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி

ஈரோடு, ஆக.13- ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், கம்ப்யூட்டர் டேலி பயிற்சி வரும் ஆக. 19 முதல் செப். 25 வரை 30 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஈரோடு, கரூர் பைபாஸ் சாலை, கொல்லம்பாளையம் பைபாஸ் பேருந்து நிறுத்தம், ஆஸ்ரம் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், 2ம் தளத்தில், இப்பயிற்சி வழங்கப்படும். விவசாயிகள், இளை ஞர்கள், பெண்கள், சுய உதவிக்குழுக்கள் பயன்பெ றலாம். பயிற்சி பெற, 10 ஆவம் வகுப்பு தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். 18 வயது முதல்  45 வயதுக்கு உட்பட் டவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். ஞாயிறு தவிர மற்ற நாட்களில் தினமும் காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை பயிற்சி கட்டணம் ஏதுமின்றி பயிற்சி தரப்படும். மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமை கேட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு 0424 2400338 என்ற எண்ணில் தெடர்பு கெள்ளலாம் என கனரா வங்கி முதுநிலை மேலாளர் கே.சுதர்சன் தெரிவித்துள்ளார்.