tamilnadu

img

போராடும் மக்களின் உணர்வுகளை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாடு வாலியுறுத்தல்

கோவை, மார்ச் 1- குடியுரிமை திருத்த சட்டத் திற்கு எதிராக நடைபெறும் மக்க ளின் வலுவான போராட்ட உணர் வுகளை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கோவை யில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான வாழ்வு ரிமை மாநாடு வலியுறுத்தியுள் ளது.  கோவை கொடிசியா மைதா னத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியுரிமை சட் டத்திற்கு எதிராக வாழ்வுரிமை மாநாடு சனியன்று நடைபெற்றது. மஜக பொதுச் செயலாளர் தமி முன்  அன்சாரி தலைமையில் நடை பெற்ற இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற் றார். இதில், அருட்தந்தை ஜெகத் கஸ்பர், தபெதிக  பொதுச் செயலா ளர் கு.ராமகிருஷ்ணன், திப்பு சுல்த் தான்  கொள்ளு பேரன் பக்தியார் அலிஷா உட்பட பல்வேறு  அமைப் புகளை சேர்ந்த பிரமுகர்கள் பங் கேற்றனர். இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயி ரக்கணக்கானோர் இம்மாநாட் டில் பங்கேற்றனர்.  முன்னதாக, இந்த மாநாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்களித்த அதிமுகவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். எம்.ஜி.ஆர், ஜெய லலிதா ஆகியோரின் சமூக நீதி கோட்பாடுகளுக்கு எதிராக இன் றைய அதிமுக தலைமை செல்கின் றது, இது தமிழக மக்களின் மன நிலைக்கு எதிரானது. டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். டெல்லி கலவரத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும். சிஏஏ, என்பிஆர், என் ஆர்சி சட்டங்களை அமல்படுத்தக் கூடாது. சிஏஏ சட்டத்திற்கு எதி ராக போராடியதற்காக போடப் பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. இம்மாநாட்டில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா பேசுகையில், 2002ல் குஜராத்தில் நடந்த கலவ ரம் இப்போது டெல்லியில் ஏற் பட்டு இருக்கின்றதா? என்று நினைக்க தோன்றுகின்றது. மக் கள் தன்னெழுச்சியாக போராடு வதை அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும். டெல்லியில் போராடு பவர்கள்  காந்தி, அம்பேத்கார் படங்களை வைத்து போராடுகின் றனர். இது இந்து முஸ்லீம் பிரச்ச னையல்ல, இது பொதுப்பிரச் சினை. காந்தியடிகள் இப்போது உயிரோடு வந்தால் எல்லாருக்கும் நல்ல புத்தி கொடு என கேட்கமாட் டார். நரேந்திரமோடி, அமித்ஷா ஆகிய இருவருக்கு மட்டும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்.  இந்தியாவை ஆளும் பாசிச கூட்டமாக ஆர்எஸ் எஸ், பாஜக மாறி இருக்கின்றது. இவர்களின் பிடியில் இருந்து நமது ஜனநாயகம் காப்பாற்றப் பட வேண்டும். இப்போது கம்யூ னிஸ்ட் கட்சிகள் மீது தேச துரோக வழக்குகள் போடுகின்றனர். தேச துரோக வழக்குகளை கண்டு கம்யூ னிஸ்ட்கள் அச்சம் அடைந்துவிடு வார்கள் என அமித்ஷா நினைத் தால் அது தவறு. குடியுரிமை திருத் தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன் றத்தில் தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வர வேண்டும். அப்படி  கொண்டு வரவில்லை என்றால் அவர்களின் ஆட்சி முடிவுக்கு வரு கின்றது என்று அர்த்தம் என்றார்.  முன்னதாக, மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேசு கையில், ஆட்சியாளர்களை எச்ச ரிக்கும்  விதமாக இந்த மாநாட்டு திடலுக்கு காந்தியடிகள் பெயரை வைத்திருக்கின்றோம். எந்த காந் தியை சுட்டு கொன்றார்களோ,  அந்த காந்தியின் பெயரை மேடைக்கு சூட்டி எச்சரிக்கை விடுக்கின்றோம். பாசிச வெறிக்கு பலியான காஷ்மீர் சிறுமி  ஆசிபா பெயரை  நுழைவு வாயிலுக்கு சூட்டி இருக்கின்றோம். நாட்டில் வேலை இல்லா திண்டாட்டத்தில் தினமும் 35 இளைஞர்கள் உயிரி ழக்கி்ன்றனர். 1 மணி நேரத்திற்கு 100 குழந்தைகள் உயிரிழக்கின் றனர். விவசாயிகள் வாழ வழி யின்றி உயிரிழக்கின்றனர். கல்வி வணிகமாக மாறி விட்டது, தொழில்கள் முடக்கி விட்டது. இந்த மோசமான சூழ்நிலையை  திசை திருப்ப , இந்த  சிஏஏ போன்ற நாசகர சட்டங்களை இந்த அரசு கொண்டு வந்திருக்கின்றது. டெல்லி சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண் டும். நீதிபதி முரளிதர் இரவோடு இரவாக மாற்றப்படுகின்றார். நீதித்துறையில்  பாசிச ஆதிக்கம் எப்படி இருக்கின்றது என்பதற்கு இது உதாரணம். நாடாளுமன்றம், நீதித்துறை மீது நம்பிக்கை குறைந் தாலும் பெரும்பான்மை மக்கள் மீதான நம்பிக்கை  அதிகரித்துள் ளது. எனவே, தமிழக அரசு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்ப ளிக்க வேண்டு்ம் எனவும், குடியு ரிமை திருத்த சட்டத்திற்கு எதி ரான தீர்மானத்தை சட்டமன்றத் தில் நிறைவேற்ற வேண்டும். அது வரை இந்த போராட்டங்கள் தொட ரும் என தெரிவித்தார்.

;