சேலம், ஆக.6- காப்பீட்டு துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடு உயர்வு என்ற மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப பெற வலி யுறுத்தி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தின் சேலம் கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட 29 ஆவது ஆண்டு பொது மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலம் குஜராத்தி சமாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி துவக்க உரையாற்றினார். இதில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.செந்தில் குமார், கே. சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினார்.
புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில் சங்கத்தின் தலைவராக ஆர்.நரசிம்மன், பொதுச் செயலாளராக ஆர். தர்மலிங்கம், பொருளாளராக எஸ்.சாமி நாதன், துணைத் தலைவர்களாக ஆர்.ரவீந்திரன், பி. பால்ராஜ், வி.ஹரிணி , இணைச் செயலாளர்களாக ஏ.கலிய பெருமாள், எ. மாதேஸ்வரன், எம்.கணேச பாண்டியன், உதவி பொருளாளராக எல். சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். முடிவில், இணைச் செய லாளர் எ.மாதேஸ்வரன் நன்றி கூறினார்.