tamilnadu

ஸ்டேன்ஸ் சுவாமியை விடுதலை செய் சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

கோவை, நவ. 21 –  பழங்குடியின மக்களின்  உரிமைகளுக் காக குரல் கொடுத்த ஸ்டேன்ஸ்சுவாமியை கைது செய்ததை கண்டித்து கோவையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மத்திய பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்த பிறகு தொடர்ந்து இடது அறிவு ஜீவிகள், மனித உரிமை செயற்பாட்டாளர் கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற வர்களை திட்டமிட்டு தேசிய பாதுகாப்பு சட் டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக தமிழகத்தை பூர்விக மாக கொண்ட அருள்பணி ஸ்டேன்ஸ் சுவாமியை கைதுசெய்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில்  பழங்குடியின மக்களின் உரி மைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

தனது 83 வயதிலும் ஆதிவாசி மக்களின் நிலத்தை சூறையாடு கார்ப்ரேட்டுகளுக்கு எதிராக நீதிமன்றம் உள்ளிட்ட உரிமை போராட்டங்களை நடத்தி வந்தார். இந் நிலையில் ஸ்டேன்ஸ்சுவாமியை மத்திய பாஜக அரசின் புலனாய்வு பிரிவை கைது செய்துள்ளது. இதனைக்கண்டித்து இடது சாரி கட்சிகள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக ஸ்டேன்ஸ் சுவாமியை விடுதலை செய்யக்கோரி கோவையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை புலியகுளம் பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் முக மதுமுசீர் தலைமை தாங்கினார். இதில், சங்கத்தின் மாநில நிர்வாகி என்.அமிர்தம் கண்டன உரையாற்றினார். இதில் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஜெரோம் ரோட் டரிக், பொறுப்பாளர் எஸ்.கருப்பையா, த.நாகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்று ஸ்டேன்ஸ் சுவாமியை விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர்.

;