tamilnadu

img

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் தொடர் மழை பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஐந்தடி உயர்வு

மே.பாளையம், ஜூலை 11-  தமிழக, கேரள எல்லையோரம் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை காடுகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் உள்ள பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.  தமிழகம் மற்றும் கேரள காடு களை நீர்ப்பிடிப்பு பகுதிகளாக கொண்டுள்ளது பில்லூர் அணை. பவானியாற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள இந்த பில்லூர் அணை நீரை ஆதாரமாகக் கொண்டே கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் தண்ணீர் தேவைக்காக பதினைந்திற்கும் மேற்பட்ட குடி நீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் வெளி யேற்றப்படும் தண்ணீர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையினை சென்றடை யும் என்பதால் பல லட்சம் மக்க ளின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு இந்த அணை நீர் முக்கியமானதாக உள்ளது.  இந்நிலையில் இவ்வாண்டு பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தள்ளிப்போனதால் பில்லூர் அணையின் நீர்மட்டம் குறைந்தே காணப்பட்டது. இத னால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதுடன், அணை யில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்திலும் மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டன. இந் நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதன் காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிக ரித்துள்ளது. செவ்வாயன்று அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 100 அடியில் 84 அடி என நீர்மட்டம் இருந்த நிலையில் புதனன்று காலை அதன் உயரம் 87 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் வியாழனன்று ஒரே நாளில் கிடுகிடுவென ஐந்தடி உயர்ந்து 92 அடியை எட்டியுள் ளது. மழையின் தீவிரம் மேலும் தொடர்ந்தால் இரண்டொரு நாளில் ஆணை நிரம்ப வாய்ப்புள் ளதாகவும், அணையின் நீர்மட் டம் 98.5 அடியை கடக்கும் போது அணையின் பாதுகாப்புக் கருதி  இதன் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்படும் என அதிகாரி கள் தெரிவிக்கின்றனர். பில்லூர் அணையின் நீர்வரத்து தற்போது இரண்டாயிரம் கனஅடியாக உள் ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரண மாக அணையில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற் பத்தி பணிகள் மீண்டும் முழு வேகத்தில் துவங்கியுள்ளன. மின்னுற்பத்தி பணிக்காக பில்லூர் அணையில் இருந்து ஆறாயிரம் கனஅடி நீர் பவனியாற்றில் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. பில்லூர் அணை நிரம்பி வருவதும், பவானியாற் றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதும் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள் ளது. 

;