tamilnadu

img

இரயில் வண்டியின் இசை கவிதை நூல் வெளியீட்டு விழா

கோவை, ஜூன் 30– தமுஎகச அமைப்பு தினத்தை யொட்டி கவிஞர் ஜின்னின் இரயில் வண்டியின் இசை என்கிற கவிதை நூல் வெளியீட்டுவிழா ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி தமிழ கம் முழுவதும் எழுத்தாளர் சங்கத் தின் சார்பில் பல்வேறு கலை இலக்கிய வடிவங்களில் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமுஎகச கோவை கிழக்கு கிளையின் சார்பில் கவிஞர் ஜின்னின் இரயில் வண்டியின் இசை கவிதை நூல் வெளியிடப்பட்டது.  இந்நிகழ்ச்சி கோவை நவஇந்தியா சாலையில் உள்ள அக்சயம் விடுதி கூட்டரங்கில் மாநிலக்குழு உறுப்பினர் அ.கரீம் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் ந.முத்து வர வேற்புரையாற்றினார். ஈட்டி திரைப் படத்தின் இயக்குநர் ரவிஅரசு கவிதை நூலை வெளியிட தமுஎகச மாவட்ட தலைவர் தி.மணி, கலை இலக்கிய பெருமன்றத்தின் ப.பா.ரமணி, கவிஞர் ஒடியன் லட்சுமணன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிஞர் மனுஷி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தமுஎகச மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் மீ.உமாமகேஷ் வரி ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங் கேற்றனர். முடிவில் கவிஞர் ஜின்னா ஏற்புரையாற்றினார்.