சேலம்,செப்.20- அரசு தொடக்கப் பள்ளிக்கு பொது மக்கள் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் கல்விசீர் வழங்கும் விழா வெள்ளி யன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கிராமம் கே.கே.நகர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரு கின்றனர். இந்த பள்ளியின் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் முடிவு செய் தனர். இதற்காக ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டு பொதுமக்களிட மிருந்து ரூ.10 லட்சம் வரை நன் கொடை பெற்றனர். இதன் மூலம் 20 கணினிகள், 50 மேஜை மற்றும் 60 நாற்காலிகள் உள்ளிட்டவைகள் வாங்கப்பட்டன. இதையடுத்து கல்விசீர் வழங்கும் விழா, கணினி ஆய்வகம் திறப்பு விழா, கலையரங்க மேடைக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இவ் விழாவிற்கு சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி தலைமை தாங்கி னார். பள்ளி தலைமையாசிரியர் வையாபுரி வரவேற்றார். மகுடஞ் சாவடி வட்டார கல்வி அலுவலர் பிரேமானந்த், சேலம் நகர்ப்புறம் வட்டார கல்வி அலுவலர் மகேஸ் வரன், வட்டார வள மைய மேற் பார்வையாளர் விஜயலட்சுமி, பெற் றோர்-ஆசிரியர் கழக தலைவர் முத்து, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, சேலம் பட்டாம்பூச்சி தூரிகை அமைப்பின் சார்பில் ஆசிரியர் விவேகானந்தர் முயற்சியால் பல வகையான ஓவியங்களால் பள்ளிச் சுவர்கள் வண்ணமயமாக்கப்பட்டன. இவ்விழாவில் கே.கே.நகர் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விமலா ராணி, ஆசிரியர்கள் சீனி வாசன், தேவி, குமார், செல்வம், கஸ்தூரி மற்றும் நன்கொடை யாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி ஆசிரியர் அருள் நன்றி கூறினார்.