tamilnadu

img

மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் 50 சதவிதித இடஓதுக்கீடு வழங்குக

தருமபுரி, ஆக.20- பட்டமேற்படிப்பில் மருத்துவர் களுக்கு 50 சத இட ஒதுக்கீடு வழங்கு மாறு, அரசு மருத்துவர்  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனை முன்பு செவ்வாயன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு, பட்ட மேற் படிப்பில் மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணி யிட கலந்தாய்வு நடத்த வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண் ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை அரசு ஆணை இரண்டில் அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.  இந்த மனிதச்சங்கிலி போராட் டத்தில்,  அரசு டாக்டர் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் மருத்துவர் லஷ்மி நரசிம்மன், மாவட்டத் தலைவர் மருத்துவர் சீனிவாசன் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட அரசு  மருத்துவர்கள் கலந்து கொண் டனர். மனிதசங்கிலியில் மருத்து வர்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.  

சேலம்

இதேபோல், சேலம் அரசு  மருத்துவமனை முன்பு, அரசு  மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.