விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பொள்ளாச்சி, அக்.19 - கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா விற்குட்பட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற அக் டோபர் 22 ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் பொள்ளாச்சி சார் ஆட்சி யர் அலுவலகத்தில் வரு வாய் கோட்டாட்சியர் இரவிக்குமார் தலைமை யில் நடைபெறுகிறது. மேற்படி கூட்டத்தில் அனைத்து துறை அலுவ லர்களும் கலந்துகொள்ள இருப்பதால், விவசாயி கள் விவசாயம் தொடர்பு டைய தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறு மாறு இதன் மூலம் அறி விக்கப்படுகிறது.
அரூரில் சட்டவிரோத மதுக்கூடத்திற்கு சீல்
தருமபுரி, அக்.19- அரூரில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் மது அருந்தும் கூடத்திற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத் தனர். தருமபுரி மாவட்டம், அரூர் நகரில் வர்ணதீர்த்தம் பகுதியில் தனியார் கட்டடத்தில் மது விற்பனை செய்தும், மது அருந்தும் பாரும் நடத்தி வந்துள்ளனர். இந்த மது அருந்தும் இடங்கள் குடியிருப்பு பகுதிகள், கோயில் வளாகத்துக்கு அருகில் இருப்பதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, டாஸ்மாக் நிறுவனத்தின் தருமபுரி மாவட்ட மேலாளர் கேசவன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் வர்ணதீர்த்தம் பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், டாஸ்மாக் மது பாட்டில் களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தும், அரசு அனுமதியின்றி பார் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அனுமதியின்றி நடத்தப் பட்ட மது அருந்தும் கூடத்திற்கு சீல் வைத்தனர். இந்த கடையில் இருந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மது பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் தெரிவித்தனர்.