tamilnadu

img

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல்துறையினர் மாதர் சங்கம் குற்றச்சாட்டு

கோவை, நவ. 4– பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் துணை போவதாக குற்றம்சாட்டி மாதர் சங்கத்தினர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.  இதுகுறித்து மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா கூறுகை யில், கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த 28 ஆம் தேதி அதே பகு தியே சேர்ந்த கணேசன் என்பவர்  பாலியல் பலாத்கார நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக முன்னின்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து சுல்தான்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய் வதற்கு எவ்வித அக்கறையும் காட்டாத காவல்துறையினர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் அழுத்தத்திற்கு பிறகே நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேநேரத்தில் பாலியல் முயற்சியில் ஈடுபட முயன்ற கணேசனை தப்பிக்க வைக்கவும், வழக்கை திசை திருப்பும் நோக் கத்தில் தன்னை தாக்க முயன்றதாக கணே சனிடம் இருந்து பொய்யான புகாரை காவல்துறையினர் பெற்றுள்ளனர். நியாயம் கேட்க சென்ற இளைஞர்கள் மீது கணேசன் அளித்த பொய்யான புகாரை பெற்ற காவல் துறையினர் மூவர் மீது வழக்குபதிவு செய் துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ணிற்கு பாதுகாப்பு அரணாய் இருக்க வேண்டிய காவல்துறையினர் குற்ற வாளிக்கு உடந்தையாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, உடனடியாக மூவர் மீது போடப் பட்ட பொய்வழக்கை காவல்துறையினர் எவ்வித நிபந்தனையுமின்றி திரும்பப்பெற வேண்டும் என மனு அளித்துள்ளதாக தெரி வித்தார். மேலும், பாலியல் குற்றவாளி மீதும், அவருக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்ணின் தாய் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.  முன்னதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க  மாதர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜ லட்சுமி, சுதா, தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட செயலாளர் வழக்க றிஞர் ஆறுச்சாமி மற்றும் மாதர் சங்க நிர்வாகி கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதர வாக ஊர் மக்கள் திரளாக வந்திருந்தனர்.