tamilnadu

img

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை மாதர் சங்கம் குற்றச்சாட்டு 

 திருநெல்வேலி, ஆக.25- தமிழகத்தில் பெண்களுக்கு பாது காப்பான சூழல் இல்லை .சமூகவலை தளங்கள், போன்களில் உரையாடி பெண் கள் வாழ்க்கையை சீரழிக்கும் கும்பலை தடுக்க சைபர் கிரைம் பிரிவை அனைவரும் எளிதில் அணுகும்படி தனிப் பிரிவாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி உஷா பாஷி கூறி னார். நெல்லை நவஜீவன் டிரஸ்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி உஷா பாஷி செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் விசாரணைக்கு அழைத்துவந்த குமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த லீலாபாய் என்ற பெண் போக்சோ வழக்கு ஒன்றிற்காக விசா ரணைக்கு வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர் பாக வள்ளியூர் மேஜிஸ்ட்ரேட் விசா ரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்பில்லாத லீலாபாய் சந்தேகத் தின் பேரில் விசாரணை நடத்த அழைத்து வந்து இறந்த சம்பவத்தில் மர்மம் இருப் பதாகவும், இரவு 9 மணிக்கு பெண் ஒரு வரை விசாரணைக்கு அழைக்க அவ சியம் என்ன ? அவசர அவசரமாக உடற் கூறு செய்து லீலாபாய் உடல் எரிக்கப் பட்டது ஏன் ? என பல சந்தேகங்கள் எழுந்துள்ளதால் இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.  இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த மாதர் சங்கம் சார்பில் மனு அனுப்பப் பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வரு கிறது. பெண்களை ஏமாற்றி சமூக வலை தளங்கள் மற்றும் மொபைல் போன் களை பயன்படுத்தி பாலியல் குற்றங்க ளில் அதிகமானவர்கள் ஈடுபட்டு வரு கின்றனர் அந்தக் குற்றங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதற்கு புகார் செய்வதற்கு பெண்கள் தயங்கி வரு கின்றனர். இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் எளிதில் காவல்துறையை அணுகும் வண்ணம் சைபர் கிரைம் பிரிவை தனி அமைப் பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் சமூக வலைதள குற்றங்களைப் புகார் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அல்லது உயர் அதிகாரி ஒருவரி டம் மனு செய்தால் அவர்களின் பரிந்து ரையின் பேரிலேயே சைபர் கிரைம் குற்றங்கள் சேர்க்கப்படுகிறது. இத னால் பல குற்றங்கள் கண்டுபிடிக்க முடி யாத நிலை உருவாகி வருகிறது. இந்த பிரச்சனைகளை களைய சைபர் கிரைம் அமைப்பை தனி அமைப் பாக உருவாக்கி அதற்கான தனி அதி காரிகளை நியமித்து விசாரணையை நேரடியாக புகாரை ஏற்று நடத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் பொள்ளாச்சி சம்பவம், அதனைத் தொடர்ந்து வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 600 பெண்களை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டிய சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒரு வர் கைது செய்யப்பட்ட சம்பவம், பெண்களுக்கெதிரான பாலியல் தொல் லைகள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பார்க்கும் போது தமி ழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்பது தெரிய வரு கிறது. பெண்கள் அதிகம் பணிபுரியும் இடங்களில் விசாகா கமிட்டி அமைக்கப் பட வேண்டும்.ஆனால் அந்த அமைப்பு பல இடங்களில் அமைக்கப்படாமல் உள்ளது.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் நிலையங்களும் வழக்குப்பதிவு செய்யும் இடங்களும் எளிதல் அணுகும் முறை யை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாதர் சங்க மாவட்ட தலைவர் கு.பழனி, மாவட்ட செயலாளர் பி.கற்பகம், மாவட்ட துணை தலைவர் ஆயிஷா ஆகியோர் உடன் இருந்தனர்.