tamilnadu

img

சிசிடிவி கேமராக்கள் மூலம் ஒன்றரை லட்சம் வழக்குகள் புலனாய்வு

கோவை மாநகர காவல் ஆணையாளர் தகவல்

கோவை, நவ. 25 –  கோவை மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இதுவரை ஒன்றரை லட்சம் வழக்குகள் புல னாய்வு செய்யப்பட்டுள்ள தாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரன் தெரிவித்தார்.  கோவை மாநகரில் நடைபெறும் போக்கு வரத்து விதிமீறல், கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை போன்ற  குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த வும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளி களை விரைவாக கைது செய்யவும் மூன்றாம் கண் எனப்படும் கண்காணிப்பு  கேமராக்கள் அமைக்கும் பணியை கோவை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர் ஆர்.எஸ்.புரத்தில் துவங்கி, பீளமேடு, சாய் பாபா கோவில்,  காட்டூர்,  போத்தனூர், சிங்காநல்லூர்,  சரவணம்பட்டி என  அனைத்து பகுதி காவல் எல்லைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக் கப்பட்டுள்ளன. இந்நிலையில் திங்களன்று டி1- இராம நாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட பகுதிகளில் 73 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழா நடைபெற்றது. மேலும் டி1- காவல் நிலையத்தின் புனரமைக்கப்பட்ட புறக்காவல் நிலையமும் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரனால் துவங்கப் பட்டுள்ளது. இவ்விழாவில் பங்கேற்ற கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் பேசுகையில்: கோவை மாநகர தெற்கு காவல் எல்லையில் அதிக அளவில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண் காணிப்பு கேமராக்கள் என்பது குற்றத்தை  தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாநகரில் ஒன்பதாயிரம் கேமராக்கள்  பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.   தமிழகத்தில் முதன்முறையாக கூகுள் மேப்பில் கேமராக்கள் இணைக்கப்பட் டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் தின மும் 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப் படுகிறது.   இதுவரை சிசிடிவி கேமராக்கள் மூலம் ஒன்றரை லட்சம் வழக்குகள் புல னாய்வு செய்யப்பட்டுள்ளது. போக்குவ ரத்து பாதுகாப்பு பணிகளுக்காக காலை நேரங்களில் கூடுதலாக காவலர்கள் நிறுத் தப்பட உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, இவ்விழாவில், துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், உமா ஐ.பி. எஸ்  முத்தரசன், உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல், இராமநாதபுரம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் லதா  மற்றும் தற்போதைய ஆய்வாளர் முருகே சன், உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயராஜ் உள்ளிட்ட பல காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;