பென்னாகரம், டிச.6- பென்னாகரம் அருகே தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில், இயற்கை விவசாயம் குறித்தும், அதனை மேற் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விவ சாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்குட்பட்ட பொச்சாரம்பட்டி பகுதியில் ஏ.எம்.இ. என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில், இயற்கை விவசாயம் குறித்தும், பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு மற்றும் பயிற்சிகள் வியாழனன்று மேற்கொள்ளப் பட்டன. பென்னாகரம் பகுதியானது சிறு தானிய உற்பத்தியில் முன்னிலை வகிக் கிறது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் வகையில், இப்பகுதி விவசாயி களுக்கு இயற்கை விவசாயம், பருவநிலை மாற்றம் குறித்து தனியார் தொண்டு நிறுவ னத்தினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா் இயற்கை விவசாயம் மேற் கொள்ளும் போது பருவ நிலை மாறுபாடு காரணமாக விவசாயத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் குறித்தும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பூச்சிகள், இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். இதில் சுப்பு ராஜ் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஜே.கே. திருவாதி, சுரேஷ், கிருஷ்ணா மற்றும் ஏ.எம்.இ. தனியார் நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணன், குமார், வெங்கடேஷ், முனி ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண் டனா்.