tamilnadu

img

தேசிய வாக்காளர் தினம் அனுசரிப்பு

கோவை, ஜன. 25- கோவை மற்றும் நீலகிரி மாவட் டத்தில் தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனியன்று வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தொடங்கி வைத் தார். இப்பேரணியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் முக்கியத் துவத்தினை வலியுறுத்தும் வகை யில் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியும் பேரணியாக சென்ற னர். இவ்விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் தொடங்கி பந்தய சாலை வரை சென்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னாராமசாமி, மாவட்ட ஆட் சியரின் நேர்முக உதவியாளர் (தேர் தல்) பொன்.முத்துராமலிங்கம், வரு வாய் கோட்டாட்சியர்கள் தன லிங்கம், சுரேஷ், மாநகராட்சி உதவி ஆணையர் மகேஷ், வட்டாட்சியர் (தேர்தல்) சுந்தரராமன் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதகை
இதேபோல் நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் சனியன்று 10-வது தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச் சியினை மாவட்ட தேர்தல் அலுவ லரும், மாவட்ட ஆட்சியரும் ஜெ. இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத் தார்.  இந்நிகழ்ச்சியில் வெலிங்டன் பாளைய வாரிய தலைமை செயல் அலுவலர் பூஜா பலிச்சா, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமா லினி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (திட்ட இயக்குநர்) பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் (பொது) கீதா பிரியா, உதகை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உதகை வட்டாட்சியர் ரவி,  தனி வட்டாட்சியர் (தேர்தல்) மகேந் திரன் உட்பட அரசுத்துறை அலுவ லர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உள் ளிட்ட திராளனோர் கலந்து கொண் டனர்.

;