மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்னெடுப்பால் மாமதுரை அன்னவாசல் துவக்கப்பட்டு ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற மக்களுக்கு உணவளிக் கும் இயக்கம் நடைபெற்று வருகிறது. இவ் வியக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை மேட்டுப்பாளையத்தில் இருந்து வியாழனன்று மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.