tamilnadu

img

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் மதநல்லிணக்கமும், மனிதநேயமும்

கோவை, மார்ச் 4–  கோனியம்மன் தேரோட்டத்தில்  தீச்சட்டி ஏந்தி வந்த பக்தர்களுக்கு பள்ளி வாசலில் இஸ்லாமியர்கள் தண்ணீர்  கொடுத்து உபசரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையிலுள்ள புகழ்பெற்ற கோனி யம்மன் கோவிலில் மாசி மாதத் திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந் தாண்டிற்கான விழா புதனன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், முக் கிய நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட தேரில் கோனியம்மன் தேரோட்டம் நடைபெற்றது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த தேரோட்டத்தில், ஒப்பணக்கார வீதி யில் உள்ள கோவை அத்தார் ஜமாத் பள்ளி வாசல் சார்பாக பத்தாயிரத்துக்கும் மேற் பட்ட தண்ணீர் பாட்டில்கள் பொதுமக்க ளுக்கு வழங்கப்பட்டது. இரு கைகளிலும் தீச்சட்டி ஏந்தி வந்தப் பக்தர்களின் வாயில் தண்ணீரை ஊற்றி தாகத்தை தனித்தனர். மதவெறித் தீயைத் தூண்டி வன்முறையாக மாற்ற மதவெறி சக்திகள் ஏங்கிக்கிடக்கிற வேலையில் மதங்களும், மார்க்கங்களும் வேறானாலும் நாங்கள் எப்போதும் சகோ தரர்களே என மதநல்லிணக்கத்தை வெளி படுத்தியுள்ளனர். இது பார்போரை நெகிழ வைத்தது.

;