tamilnadu

புர்கா அணிய கேரள முஸ்லிம் கல்வி வாரியம் தடை

திருவனந்தபுரம், மே 2 -இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் விளைவாக, அந்நாட்டு அரசு, இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணியக் கூடாது என கேரளாவில் உள்ள முஸ்லிம் கல்விக்கழகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. இக்கல்விக் கழகம் 35 கல்லூரிகள் மற்றும் 72 பள்ளிகளை நடத்தி வருகிறது. முஸ்லிம் கல்விக் கழகத்தின் தலைவர் பாசல் கபூர் ஏப்.17 அன்று வெளியிட்ட அறிக்கையில், கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவிகள் முகம் வரை மறைக்கும் புர்கா ஆடையை அணியக்கூடாது. எந்தவித முரண்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும். இப்புதிய உத்தரவு 2019-2020-ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். கைகள் கூட தெரியாத அளவிற்கு தொடர்ந்து புர்கா அணிவதால், இஸ்லாமியப் பெண்கள் வைட்டமின் டி குறைபாட்டிற்கு ஆளாகக்கூடும் என தெரிவித்துள்ளார்.

;