கோவை, ஜூலை 15- உரிய அனுமதியின்றி ஆழ் துளைக் கிணறுகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீரை விற் பனை செய்வதை எதிர்த்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று விவசாயிகள் மனு அளித்தனர். கோவை அடுத்த பள்ளப் பாளையம் அருகே உள்ள ஒட்டர் பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு குறித்து கூறுகையில், தங்கள் பகுதியில் மாட்டுப் பண்ணை அமைக்க அனுமதி பெற்றுக் கொண்டு, பாலசுப்ரமணியன் என் பவர் ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளார். ஆனால், விவ சாயம் எதுவும் செய்யாமல் ஆழ் குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்து வரு கின்றனர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயக் கிணறுகளில் தண்ணீர் வற்றி வருகின்றது. இதனால் தென்னை, வாழை, கரும்பு ஆகியவை கருகி வருகிறது. எனவே, உடனடியாக தண்ணீர் விற்பனையை தடுக்க வேண்டும் என விவசாயிகள் அளித்த மனுவில் தெரிவித்தனர். இதேபோல 49-வது வட்ட திமுக முன்னாள் மாமன்ற உறுப்பி னர் மீனா லோகு உள்ளிட்ட திமுக வினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மனுவில், ரத்தினபுரி பகுதி தயிரிட்டேரி மேம்பாலப் பணி களை விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தி யுள்ளனர். இதில், 2009-ம் ஆண்டு மேம்பாலம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் துவங் கப்பட்டது. தற்போது, பணிகள் நிறைவடைந்த நிலையில், பாலம் திறக்கப்படாமல் இருக்கிறது. ஆனால், பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்த துவங்கி விட்டனர். இணைப்பு சாலைகள், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, நடைபாதை அமைப்பது போன்ற பணிகள் துவங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதிப்படுவதால் இப்பணிகளை விரைந்து முடித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித் துள்ளனர்.