tamilnadu

டெங்கு காய்ச்சல் தாக்குதல் அதிகரிப்பு

திருப்பூரில் தொடர் மழை காரணமாக

திருப்பூர், டிச. 2 - திருப்பூர் மாநகரில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், டெங்கு காய்ச் சல் தாக்குதல் அதிகரித்திருப்பதாக மருத்துவ வட்டாரத்தினர் கூறு கின்றனர். திருப்பூர் மாநகரம் கடந்த பல ஆண்டு காலமாகவே டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதி யாக உள்ளது. இந்த ஆண்டும் திருப்பூர் மாநகரம் மட்டுமின்றி, சுற்று வட்டார கிராமப்புறப் பகுதி களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இங்கு டெங்கு காய்ச்சலின் தாக்குதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மழைநீர் செல்ல முழுமையான வடிகால் வசதி நகரில் இல்லை. எனவே பல்வேறு பகுதிகளில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து வீதிகளிலும், சாலையிலும் செல் லும் நிலை தொடர்கிறது. அத்து டன் பல பகுதிகளில் வடிகால்க ளில் குப்பைகள், திடக்கழிவுகள் தேங்கி கழிவுநீர் செல்ல முடியா மல் அடைப்பு ஏற்படுத்தி வருகி றது. இதனாலும் சுகாதார சீர்கே டும், நோய்த் தாக்குதலும் அதி கரித்துள்ளது. எனினும் மாநகரிலும், ஒன்றி யப் பகுதிகளிலும் ஒருங்கிணைந்த முறையில் சுகாதாரப் பாதுகாப் புப் பணிகள் மேற்கொள்வதில் முன்னேற்றம் இல்லை. கொசு ஒழிப்புப் பணியாளர்கள் போதிய அளவில் நியமிக்கப்பட்டிருப்ப தாக மாநகராட்சி தெரிவித்தாலும், பல பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வருவதில்லை. டெங்கு தாக்குதலை எதிர்கொள்ள அரசு ஒதுக்கீடு செய்த நிதி முழு மையாக செலவிடப்படாமல் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

சுகாதாரக் களப்பணியை மாந கராட்சி பெரிதாக எடுத்துக் கொள் வதில்லை என பல்வேறு தரப்பின ரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் கொசு ஒழிப்பு பணியில் சுணக்கம் நிலவுகிறது. மேலும்  கடந்த சில நாட்களாக மாநகரில் மழை தொடர்ந்து பெய்து வருவ தால் மாநகரின் பல்வேறு குடியி ருப்பு பகுதிகள், பேருந்து நிறுத்தங் கள் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. இதில் கொசுப்புழுக் களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.  மாநகரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் ராக்கியாபாளையம் 8 வயது சிறுவனும், செரங்காட்டை சேர்ந்த 8 வயது சிறுமியும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வருவதாக அரசு தலைமை மருத்துவமனை மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.\

காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தனியார் மருத்துவமனைகளிலும் விபரங்களை அரசு சுகாதாரத் துறை சேகரித்து வருகிறது. ஆனால் முழுமையான விபரங் களை வெளிப்படைத்தன்மை யுடன் சேகரிப்பதற்கு மாறாக, பாதிப்பின் தன்மையைக் குறைத் துக் காட்டுவதற்காக காய்ச்சல் தாக்குதலில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும்படி கோரு வதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர். கடுமையான பாதிப்புகளுடன் சிகிச்சை பெறு வோர் விபரம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிபிலிருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துவிட்டால் அவர்களை கணக்கில் கொள்வ தில்லை என தனியார் மருத்துவ மனை மருத்துவர் ஒருவர் தெரி வித்தார்.  திருப்பூரில் டெங்கு காய்ச்சல் தாக்குதலைக் கட்டுப்படுத்த முழு வீச்சில் சுகாதாரத் துறையும், உள் ளாட்சி நிர்வாகங்களும் ஒருங்கி ணைந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.