ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் தற்கொலை முயற்சி
சேலம், பிப்.10- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவன், மனைவி இருவரும் கந்துவட்டி கொடுமை யின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. சேலம் கிச்சிப்பாளையம் மோகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், இருசக்கர வாகனம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் தனது தொழில் முதலீட்டுக்காக அப்பகுதியை சேர்ந்த பாலாஜி சக்தி வேல் என்பவரிடம் ரூ.30 லட்சம் கந்துவட்டி கடன் பெற்றுள்ளார். தற்பொழுது கடனை திரும்ப செலுத்திய நிலையிலும் மீண்டும் பணம் செலுத்தும்படி நாள்தோறும் பாலாஜி சக்திவேல் தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது, பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தங்கள் மீது திடீரென ஊற்றி தற் கொலைக்கு முயன்றனர். இதைய டுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, தண் ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் சேலம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவன், மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.