tamilnadu

img

திருப்பூரில் இந்து முன்னணி குண்டர்கள் ரௌடித்தனம்

திருப்பூர், ஏப். 8-திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை தாக்க முயன்ற இந்து முன்னணி குண்டர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இந்து முன்னணி தாக்குதலில் திமுக மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.திருப்பூர் தாராபுரம் சாலை கரட்டாங்காட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு வாக்கு சேகரிப்புர் பொதுக்கூட்டம் திங்களன்று மாலை நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, திக தலைவர் கி.வீரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் வீரமணி பேசும் பொதுக்கூட்டத்துக்கு தடை கோரி மொட்டை கடிதம் திங்களன்று காலை தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து இக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்படும் என்ற தகவல் கசிந்தது. எனினும் திட்டமிட்டபடி கூட்டம் தொடங்கியது. 


இதில் பேசுவதற்காக கி.வீரமணி திமுக மாவட்டச் செயலாளர் செல்வராஜுடன் கூட்ட நிகழ்விடத்துக்கு காரில்வந்தார். அங்கு வந்துஅவர் இறங்கியபோது திடீரென அங்கு இந்துமுன்னணி குண்டர்கள் ஓடிவந்து தாக்குவதற்கு முயன்றனர். இதைப் பார்த்து கூட்டத்துக்கு பாதுகாப்புப் பணிக்கு வந்தகாவலர்கள் குண்டர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். அத்துடன் கூட்டத்துக்கு வந்த மார்க்சிய, பெரியாரிய தொண்டர்களும் ரௌடி குண்டர்களை விரட்ட அங்கு அரண் அமைத்து திரண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து இந்து முன்னணி குண்டர்கள் அங்கிருந்து களைந்து ஓடினர்.இதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் எழுச்சியுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் பேசிய திக தலைவர் வீரமணி, காவிக் கூட்டம் தாக்குதல் நடத்துகிறது என்றால் அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டார்கள் என்று அர்த்தம். விரக்தியில் வன்முறையை கையில் எடுக்கிறார்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று கூறினார்.



;