tamilnadu

img

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கிடுக

தருமபுரி, ஏப். 23-கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து மொரப்பூர் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஊர்வலமாகச் சென்று அரூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.தருமபுரி மாவட்டம், கே.ஈச்சம்பாடியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக் கட்டு அமைதுள்ளது. இந்த அணைக்கட்டு வழியாக மழைக் காலங்களில் அதிக அளவில் உபரி நீர் வெளியேறுகிறது. இந்நிலையில், மொரப்பூர் பகுதியிலுள்ள எலவடை, நவலை, சின்னாகவுண்டம்பட்டி, அண்ணாமலைப்பட்டி, செங்குட்டை, ஆண்டிபட்டி, சென்னம்பட்டி, தொப்பம்பட்டி, பெரமாண்டப்பட்டி, சாமண்டஹள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 40 ஏரிகளுக்கு நீர் ஆதாரம் இல்லை. இதனால், அப்பகுதிகளிலுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனவே, கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து மொரப்பூர் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி சின்னாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த மூத்த விவசாயி ஜெயபால் தலைமையில், மொரப்பூரில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாகச் சென்றனர். கல்லாவி கூட்டுச்சாலையில் இருந்துமொரப்பூர் பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோட்டியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோட்டி, நாடாளுமன்ற தேர்தல் மற்றும்சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

;