உதகை, ஜூலை 13- அரசு அலுவலக இளநிலை உதவியாளர் தேர் விற்கான இலவச பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடங்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் இளநிலை உதவியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு கள் துவக்க விழா வெலிங்டன் ஐஎம்ஏ ஹாலில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தொரை தலைமை வகித்தார். துணை செயலாளர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் எம்.பொன்னு முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் கே.சி.கோபிகுமார் பயிற்சி வகுப்பு களை துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் விவேக் சந்திரன், சிஐடியு மாவட்ட பொருளாளர் ரமேஷ், டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் மகேஸ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறை வாக எல்.தியாகராஜன் நன்றி கூறினார்.
ஈரோடு
இதேபோல், ஈரோடு கலைக் கல்லூரியில் நடை பெற்ற இலவச பயிற்சி மையத் துவக்க விழாவினை கல்லூரிமுதல்வர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். கல்லூரியின் பொருளியல் துறை தலைவர் பேராசிரி யர் முனைவர் நா.மணி, ஓய்வு பெற்ற மாவட்ட வரு வாய் அலுவலர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் மாவட்டதலைவர் எம்.அண்ணா துரை, சிஐடியு மாவட்ட தலைவர் எச்.ஸ்ரீராம், செயலா ளர் எஸ்.சுப்ரமணியன், துணை து லைவர் பி. சுந்தரரா ஜன், டாஸ்மாக் சங்க பொது செயலாளர் வை.பாண்டி யன், துணை தலைவர் பொன்.பாரதி, பொருளாளர் வி.ராஜேந்திரன், துணை செயலாளர் தோழர் சி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.