கோவை, டிச. 8– கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சம்பந்தப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அடுத்துள்ள ஈச்சனாரியில் தனியார் கல்லூரிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே இரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சட லத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்த நபர் பெரிய நாயக் கன் பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் (64) என்பதும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது. ரத்த காயங்களுடன் சண்முகம் கிடந்த தால் போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.இறந்துபோன சண்முகத்தின் மொபைல் போன் அழைப்பு களை சோதனை செய்தபோது கிடைத்த துப்பின் அடிப்படையில் கோவை வெள்ள லூர் பகுதியை சேர்ந்த மணி என்பவரின மகன் மது (45), குறிச்சி அடுத்த சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சதீஷ் ( 36), கோபிச்செட்டிபாளையத்த சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் மகேஷ்வரன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். 2000 ரூபாய் நோட்டுக்கள் ஜனவரி மாதம் முதல் செல்லாது செல்லாது என்றும் இப்போதே மாற்றிக் கொள்ள லாம் என்று கூறியதையடுத்து சண்முகம் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கோடிக் கணக்கான ரூபாய் 2000 ரூபாய் நோட் டுக்கள் இருப்பதாக கூறி 4 லட்சத்து இரு பத்தைந்தாயிரம் ரூபாயை பெற்றுக் கொண்ட தலைமறைவாகி இருக்கிறார். இதையடுத்து சதீஷ் ,மகேஸ்வரன், மது ஆகியோர் ஈச்சனாரி பகுதிக்கு சண்முகத்தை வரவழைத்து அடித்து கொன்றதாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சில ருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசா ரணை நடத்தினர். அதையடுத்து கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தியின் மகன் வெங்கடேஷ் (29) ஈச்ச னாரி பகுதியில் நடத்திவரும் இன்ஜினி யரிங் நிறுவனத்தில் வைத்துதான் சண் முகத்தை அடித்து கொலை செய்தது தெரி யவந்தது. போலீசார் தேடுவதை அறிந்த சண்முகம் தலைமறைவானார். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் வெங்கடேஷ் மற்றும் சண்முகத்தை அடித்து கொலை செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் மகன் வீரமணி(24), சண்முகத்தின் மகன் ஹரிகிருஷ்ணன் (27), செல்வராஜ் மகன் கார்த்திக் (31) ஆகிய மூவ ரையும் போலீசார் அதிரடியாக கைது செய்த னர். தொடர்ந்த அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப் பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.