ஈரோடு, ஆக.12- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் ஏஐடியுசி-யின் மூத்த நிர்வாகி யும், சட்டமன்ற முன்னாள் உறுப்பி னருமான டி.கே.நல்லப்பன் கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று கால மானார். அவரது திருவுருவப் படத்திறப்பு விழா ஞாயிறன்று பெருந்துறை, திருவேங்கடம்பாளையத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.திரு நாவுக்கரசு தலைமை வகித்தார். தேசியக்குழு உறுப்பினர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகி யோர் டி.கே.நல்லப்பனின் திருவுரு வப்படத்தை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் திமுக சு.முத்துசாமி, அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.