tamilnadu

img

பொங்கல் வைத்து மகிழ்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

தஞ்சாவூர், ஜன. 16- தஞ்சையை அடுத்த நாஞ்சிக் கோட்டை பஞ்சாயத்தில், கிராமத்தின ருடன் இணைந்து புதன்கிழமை பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 100 பேர் பொங்கல் வைத்து மகிழ்ந்து கொண்டாடினர்.  முன்னதாக, இவர்களுக்குக் கொம்பு வாத்தியம் ஊதி, தமிழ் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வர வேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கபடி, சிலம்பம் ஆடுதல், தப்பாட்டம், கோலா ட்டம், கரகாட்டம், குதிரையாட்டம், புலியாட்டம் ஆகியவற்றை ரசித்தனர். இளவட்டக் கல்லை உள்ளூர் மக்களுடன் வெளிநாட்டுப் பயணி ஒருவரும் தூக்கினார். இந்நிகழ்ச்சியை கலை ஆயம், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் ஆகியவை செய்திருந்தன. 

இது குறித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கிளாரா கூறுகையில், “தமிழகத்தில் பொங்கல் விழாவில் மக்களுடன் சேர்ந்து கொண்டாடியது மகிழ்ச்சியான அனுபவம். இது எனக்கு முதல் விழா, மீண்டும் அடுத்தாண்டு வாய்ப்பு கிடைத்தாலும் நழுவ  விடமாட்டேன். நிச்சயம் வருவேன். இதுபோன்ற விழாவை, வேறு நாடுகளில் காண முடியவில்லை. உற்சா கத்தில் வார்த்தைகள் வரவில்லை” என்றார்.

;