tamilnadu

கொரோனோ வார்டில் பாதுகாப்பு உபகரணமின்றி பணியாற்ற நிர்பந்தம் - செவிலியர்கள் அச்சம்

பொள்ளாச்சி, செப். 2- பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பாதுகாப்பு உபகரணமின்றி செவிலியர்கள் மற் றும் ஊழியர்களை பணியில் ஈடுபடுமாறு மருத்துவ நிர் வாகம் வற்புறுத்துவதாக செவிலியர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி உடுமலை சாலை யில்  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள் ளது. இங்கு வெளிநோயாளிகள், உள் நோயாளிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல் கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று  அதிகரித்து வரும் நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையில் கொரோனா சிறப்பு வார்டு, தனிமைப்படுத் தப்பட்ட வார்டுகள் என இரண்டு வார்டுகள் ஒதுக்கப்பட் டுள்ளன. இதில், 70 கொரோனா நோயாளிகள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  

இந்நிலையில், ஆக.31 மற்றும் செப்.1 ஆம் தேதிகளில் கொரோனா வார்டில் பணியில் அமர்த்தப்பட்டிருந்த செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு உடைகள் வழங்க வில்லை எனவும், குறைந்த அளவே உபகரணங்கள் வழங் கியுள்ளதாகவும் செவிலியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, பல முறை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தும் இரண்டு நாட்களாகியும் இன்றளவும் பாது காப்பு உபகரணங்கள் வழங்கவில்லை. எனவே, கொரோனா வார்டுகளில் பணிபுரிகின்ற செவிலியர் களுக்கோ அல்லது துப்புரவு பணியாளர்களுக்கோ உயி ருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பும் மருத் துவம னை நிர்வாகமே ஏற்க வேண்டும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

;