tamilnadu

img

மின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிடுக மின்வாரிய இன்ஜினியரிங் யூனியன் சங்கம் கோரிக்கை

கோவை, நவ.16 – தமிழக மின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை முழுமை யாக நிரப்பிட வேண்டுமென மின்வாரிய இன்ஜினியரிங் யூனி யன் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பில் தமிழ்நாடு மின்வாரிய இன்ஜினியரிங் யூனியன் சங்கத் தின் பொதுச்செயலாளர் கோவிந் தராஜன் கூறியதாவது, தமிழ்நாட் டில் மின்வாரியத்தின் சேவை யினை நேரடியாக மக்களிடம் இணைப்பவர்கள், பிரிவு அலுவ லகங்களில் வேலை செய்யும் பணியாளர்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் வயர்மேன் மற்றும் ஹெல்பர் பணி யிடங்கள் உள்ளன. இப்பணியி டங்கள் முழுமையாக நிரப்பப்பட் டால்தான் ஒட்டுமொத்த தமிழக  மக்களின் மின் சேவை முழுமை யானதாக கொள்ளப்படும். ஆனால், தமிழகத்தில் 52 சதவிகித அளவிற்கு இப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.  

குறிப்பாக, கோவை மண்ட லத்தில் 92 சதம் வரை இப்பணி யிடங்கள் நிரப்பப்படவில்லை. உதாரணத்திற்கு ஒரு பிரிவில் வயர்மேன் 7 மற்றும் ஹெல்பர் 7 என மொத்தம் 14 பணியாளர்கள் தேவை. ஆனால், தற்சமயம் இரு வருக்கும் குறைவானர்களே அதா வது சராசரியாக 1.5 சதவிகிதத் தினரே பணியில் உள்ளனர். அவ்வாறாக கோவை மண்டலத் தில் மட்டும் வாரியம் அனுமதித்த 5 ஆயிரத்து 439 பணியாளர்களில் 482 பணியாளர்களே பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 35க்கும் மேற்பட்ட இடங்களில் மின் தடங் ல், இணைப்பு துண்டிப்பு போன்ற புகார்கள் வரும் நிலையில், 17 பேர் செய்யக்கூடிய பணியினை இருவர் மட்டுமே மண்டலம் முழுக்க செய்து வருகின்றனர். இதுதவிர அவசர காலப் பணி யினையும் இவர்கள் தான் மேற் கொள்ள வேண்டும். இதற்கான போக்குவரத்து செலவுகளையும் அவர்கள் இருவரே ஏற்றுக் கொள்ள வேண்டும். பணிச்சுமை யாலும் தேவைக்கு அதிகமான  பயணங்களாலும் பல விபத்து களும், மரணங்கள்கூட நிகழ்கின் றன. இந்நிலையில், போதுமான அளவு களப்பணியாளர்கள் இல்லாததன் காரணமாக பிரிவுப் பொறியாளர்கள், இருக்கும் சொற்ப பணியாளர்களுக்கு பணி யினை நிர்ப்பந்தித்து வழங்க  வேண்டிய நிலைக்கு தள்ளப்படு கின்றனர்.  

2018-ல் இருந்து கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக இந்த அவலநிலை நீடித்து வருகிறது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதால் மின்வாரியத்திற்கு பெரும் வருவாய் பற்றாக்குறை யும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. மாநிலம் முழுவதும் மின்வாரியத் தின் வாயிலாக மட்டும் 60 ஆயி ரம் கோடி ரூபாய் வருவாய் வருகி றது. இதில் பணியாளர் செலவீ னமாக 8 ஆயிரத்து 500 கோடி  ஒதுக்கப்படுவதாக அரசு குறிப் பிட்டாலும், வெறும் 5 ஆயிரம்  கோடி மட்டுமே ஒதுக்கப்படு கிறது. எனவே, பணியிடங்களை நிரப்புவதால் வாரியத்திற்கு எந்தவொரு நெருக்கடியும் வரப் போவதில்லை. இதுகுறித்து வாரியத் தலைவ ரிடம் பலமுறை எடுத்து கூறப்பட் டும், நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. மக்கள் கோரிக்கை களை கூட காதுகொடுத்துக் கேட்க  வாரியத் தலைவர் தயாராக இல்லை. மழைக்காலம் துவங்கி விட்ட நிலையில், வழக்கத்திற்கு மாறாக அதிகமாக ஏற்படும் மின்  துண்டிப்பு பாதிப்புகளால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப் பட வாய்ப்புள்ளது. ஆகவே, இதனை கணக்கில் கொண்டு காலிப்பணியிடங்கள் முழுமை யாக நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;